IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டு

IRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும்  சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2024, 10:29 PM IST
  • சிறப்பு சலுகைகள் மூலம் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் புக் செய்யும் வாய்ப்பு
  • சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகள் உள்ளன.
  • டிக்கெட்டை மிக விரைவாக புக் செய்து விடலாம்.
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டு title=

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க்காக உள்ள நிலையில், தினமும் ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணிக்கின்றனர்.  இந்தியாவில் ரயில் பயணம் என்பது பெரும்பாலான பயணிகள்  ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC ஆப் அல்லது இணையதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில், டிக்கெட் முன்பதிவு செய்ய எளிதான மற்றும் நம்பகமான செயலிகள் தான் முதல் தேர்வாக உள்ளது. 

இருப்பினும், IRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும்  சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன. விரைவான மற்றும் எளிதான செயல்முறையின் காரணமாக, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கின்றன. அதே நேரத்தில், செயலிகளை பயன்படுத்தும் போது கிடைக்கும் சிறப்பு சலுகைகள் மூலம் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் புக் செய்யும் வாய்ப்புகளையும் பெறலாம்.

IRCTCயின் ரயில் கனெக்ட் செயலி

IRCTC யின் ரயில் கனெக்ட் செயலி, இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பயன்பாடாகும். இதில் உடனடி முன்பதிவு, டிக்கெட் நிலை சரிபார்ப்பு, இருக்கை தேர்வு, ரயில் அட்டவணை மற்றும் PNR நிலை போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ளும் வசதிகளைப் பெறலாம். இது பயன்படுத்த எளிதானது. உயர் மட்ட பாதுகாப்பு கொண்டது.

பேடிஎம் (Paytm)

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும் முன்பதிவு செய்வதற்கும் பிரபலமான Paytm செயலி மூலம் நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். கேஷ்பேக் ஆஃபர் மற்றும் வெயிட் லிஸ்ட் டிக்கெட் ஆக இருந்தால், அது கன்பர்ம் டிக்கெட் ஆகும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறியும் கன்ஃபர்மேஷன் ப்ரெடிக்ஷன் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. கூடுதலாக, நீங்கள் வேலட்டில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம். இதனால், டிக்கெட்டை மிக விரைவாக புக் செய்து விடலாம்.

மேலும் படிக்க | Budget 2025: வருமான வரி விதிகளில் சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் அரசு, காத்திருக்கும் மக்கள்

மேக் மை ட்ரிப் (MakeMyTrip)

மேக் மை ட்ரிப் செயலி ரயில், விமானம், பேருந்து மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் அனைத்தையும் ஒரே தளத்தில் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இதில் நீங்கள் பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளையும் பெறலாம். இது தவிர, இது பயணக் காப்பீட்டு வசதியையும் கொண்டுள்ளது, இது உங்கள் பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாக்குகிறது.

கன்ஃபர்ம் டிக்கெட்

கன்ஃபர்ம் டிக்கெட் (ConfirmTkt) செயலியிலும், வெயிட் லிஸ்ட் டிக்கெட் ஆக இருந்தால், அது கன்பர்ம் டிக்கெட் ஆகும் வாய்ப்பு உள்ளதா என்பதை கணிக்கும் கன்ஃபர்மேஷன் ப்ரெடிக்ஷன் அம்சம் இதில் உள்ளது. அதாவது உங்கள் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அறிய செயலி உதவுகிறது. இது தவிர, தட்கல் டிக்கெட்டுகளையும் இதில் பதிவு செய்யலாம்.

கோஐபிபோ (Goibibo)

கோஐபிபோ ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான பிரபலமான செயலியாகும். இதில் நீங்கள் ரயில் அட்டவணை, PNR நிலை சரிபார்ப்பு மற்றும் ரயில் டிக்கெட் கன்ஃபர்ம் ஆவதற்கான கணிப்பு போன்ற அம்சங்களைப் பெறலாம். பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆகியவையும் செயலியில் கிடைக்கின்றன. இதில் கிடைக்கும் சில ஆஃபர்களால், உங்கள் டிக்கெட்டை குறைவன கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்.

சூப்பர் செயலி

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையிலும் சிரமங்களை போக்கும் வகையிலும், புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று சூப்பர் செயலி. ஆம், டிசம்பர் இறுதிக்குள் சூப்பர் செயலியை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் இந்த புதிய சூப்பர் ஆப் உதவியுடன், டிக்கெட் முன்பதிவு அனுபவமே சிறப்பாக மாறப்போகிறது.

மேலும் படிக்க | ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை தவிர்க்க வழி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News