சீன மீடியா அச்சுறுத்தல்; பாக்., தவிர 3-வது நாட்டின் ராணுவமும் காஷ்மீரில் நுழையும்

இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்து, சீனாவை சீண்டினால் இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீருக்குள்

Last Updated : Jul 10, 2017, 10:47 AM IST
சீன மீடியா அச்சுறுத்தல்; பாக்., தவிர 3-வது நாட்டின் ராணுவமும் காஷ்மீரில் நுழையும் title=

இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்து, சீனாவை சீண்டினால் இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீருக்குள் சீன படைகள் நுழையும் என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய - சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளை, தங்களுடையது என்று கூறி, சிலவற்றின் பெயர்களையும் மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தியா - சீனா - பூட்டான் நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் டோக்லாம் பகுதியில் இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இதனால் சிக்கிம் மற்றும் இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆனால், இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

உடனடியாக இந்திய ராணுவத்தை திரும்ப பெறுமாறும், இல்லையென்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால் இந்தியா, டோக்லாம் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளது. இதனால் இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

மேலும் இது குறித்து சீன ஆய்வாளர் லாங் ஷிங்சுன் எழுதி உள்ள கட்டுரையில், பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியா கேட்டுக் கொண்டால் அப்பகுதி பொதுவான பிரதேசமாக இருக்கும். தொல்லையான பகுதியாக இருக்காது. ஒருவேளை இந்தியா நினைப்பது போல், பாக்., அரசு கேட்டுக் கொண்டால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் தவிர 3-வது நாட்டின் ராணுவமும் நுழையும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News