பிரபலமான வீடியோ பகிர்வு செயலியான TikTokஇன் உரிமையாளரான சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க பங்குகளை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கும் காலக்கெடுவை நெருங்குகிறது. இருப்பினும், இதுவரை எந்த நிறுவனத்துடனும் ByteDance ஒப்பந்தம் எதையும் இறுதி செய்யவில்லை..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் அமைய டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை மேலும் மேம்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
உலக அரங்கில் இந்தியா தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக நிலை நிறுத்தி வருகிறது என்பதற்கான மற்றொரு சான்றாக, அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், தான் இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்பேன் என பறைசாற்றியுள்ளார்.
வான் வெளியில் இயக்கப்படும் ஆளில்லா சாதனங்களான ட்ரோன்கள், பெரும்பாலும் சிறிய அளவிலானவை. அவை தொலைதூரத்தில் இருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) கொரோனா வைரஸ் கோவிட் -19 சோதனைக்கு வரும்போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்றார்.
அமெரிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளிலிருந்து "நம்பத்தகாத" சீன செயலிகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டப்போவதாக இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
டிக்-டாக்-ஐ மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கும் வர்த்தக ஒப்பந்தம் வெற்றியடைந்தால், அந்த பரிமாற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு அமெரிக்க கருவூலத்திற்கு வந்து சேர வேண்டும் என்ற வினோத கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.