அதிபர் ட்ரம்ப் ஆபத்தான நிலையில் உள்ளாரா... வெள்ளை மாளிகை கூறுவது என்ன..!!!

அதிக உடல் எடை வயது மூப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர் தேசிய ராணுவ மருத்துவமனையில்  நேற்று அனுமதிக்கப்பட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2020, 07:00 PM IST
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, டிரம்பின் உடல் நிலை சீராக இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • மருத்துவமனையை அடைந்ததும், டுவிட்டரில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் மருத்துவமனையில் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அதிபர் ட்ரம்ப் ஆபத்தான நிலையில் உள்ளாரா... வெள்ளை மாளிகை கூறுவது என்ன..!!! title=

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. 

அதிக உடல் எடை வயது மூப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, டிரம்பின் உடல் நிலை சீராக இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையை அடைந்ததும், டுவிட்டரில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் மருத்துவமனையில் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான கால கட்டம் எனவும், மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் எனவும் கூறப்பட்டது.

மேலும் படிக்க | டிரம்ப்பின் உடல் நிலை கவலைக்கிடம்... அடுத்த 48 மணிநேரம் மிக முக்கியமானது..!

தற்போது, ட்ரம்பின் உடல் நிலை குறித்த உண்மை நிலையை நாங்கள் வெளியிடவில்லை என வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டுள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரது உடல் நிலை குறித்து பொது வெளியிட்ட தகவல்கள், முழுமையானது இல்லை எனவும், அவரது உடல் நிலை அதை விட மோசமாக இருந்ததாகவும் வெள்ளை மாளிக்கை அதிகாரிகள் கூறினர்.

அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும், ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருந்ததாகவும் கூறிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்துள்ளதோடு, ஆக்ஸிஜன் அளவும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

ALSO READ | கம்யூனிஸ்டுகளுக்கு No Entry... ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News