EPFO Update: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆதார் அடிப்படையிலான OTP ஐப் பயன்படுத்தி ஊழியர்களின் உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் (ELI) இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவதை உறுதிசெய்வதை இந்த செயல்முறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"முதலாளிகள் / நிறுவனங்கள், 2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதிக்குள், தற்போதைய நிதியாண்டில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆதார் அடிப்படையிலான OTP மூலம் UAN ஆக்டிவேட் செய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும்." என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
UAN ஆக்டிவேஷனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- UAN செயல்படுத்தல் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) EPFO இன் விரிவான ஆன்லைன் சேவைகளுக்கான தடையற்ற அணுகலை வழங்குகிறது.
- இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கை (EPF Account) திறம்பட நிர்வகிக்கலாம்.
- பிஎஃப் பாஸ்புக்கை (PF Passbook) பார்க்கலாம், பதிவிறக்கம் செய்யலாம்.
- பணத்தை எடுக்கவும், அன்வாஸ் தொகையை பெறவும், பரிமாற்றங்களை செய்யவும் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- க்ளெய்ம்களை ரியல் டைமில் டிராக் செய்யலாம்.
- இது ஊழியர்களுக்கு 24/7 EPFO சேவைகளை தங்கள் வீடுகளில் இருந்தே அணுக அனுமதிக்கிறது.
- இதனால் EPFO அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தீவை நீக்கப்படுகிறது.
ஆதார் அடிப்படையிலான OTP ஐப் பயன்படுத்தி UAN ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறையை இங்கே காணலாம்
- முதலில் EPFO உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
- “Important Links" -க்கு கீழ் உள்ள “Activate UAN" என்பதை கிளிக் செய்யவும்.
- UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- EPFO இன் முழு அளவிலான டிஜிட்டல் சேவைகளை அணுக, ஊழியர்கள் தங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
- ஆதார் OTP சரிபார்ப்புக்கு ஒப்புக்கொள்ளவும்.
- உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற, “Get Authorization PIN" என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆக்டிவேஷனை முடிக்க OTP ஐ உள்ளிடவும்
- வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.
இந்த வழியில் ஆதார் அடிப்படையிலான OTP ஐப் பயன்படுத்தி UAN ஐ ஆக்டிவேட் செய்யலாம்.
இரண்டாவது கட்டத்தில், UAN செயல்படுத்தலில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயோமெட்ரிக் அங்கீகார சேவை சேர்க்கப்படும். இந்த முயற்சியானது ஊழியர்களை டிஜிட்டல் சேவைகளுடன் இணைப்பதிலும், திட்டங்களின் நேரடிப் பலன்களை வழங்குவதிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ