வெள்ளை மாளிகையின் நிரந்தர அதிபர் நான் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியில் இன்னும் சில பல மணி நேரங்கள் மட்டுமே வீற்றிருப்பார். அதன்பிறகு நாற்காலியை விட்டு மட்டுமல்ல, வெள்ளை மாளிகையை விட்டும் வெளியேறுவார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், தனக்கு எதிராக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை எதிர் கொண்ட முதல் அமெரிக்க அதிபராகியுள்ளார். ட்ரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கண்டணத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேபிடல் ஹில் வன்முறை குறித்த விமர்சனங்களுக்குப் பிறகும் டொனால்ட் டிரம்ப் அமைதியாக இருந்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையை பரப்பலாம் என்று பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) எச்சரித்துள்ளது.
டிரம்ப்பின் பதவிக் காலம் முடிய இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், அவரை அதற்கு முன்பாக விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
சிறிது நாட்களுக்கு முன் உலக நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என பேசிய வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இப்போது அந்தர் பல்டி அடித்து, அமெரிக்கா தான் முதல் எதிரி என மிரட்டியுள்ளார்.
மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிடலாம் என்பதால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது..!
அமெரிக்காவின் கேபிடோல் கட்டிடத்தில் நடந்த வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார். அதிபர் பதவியில் இருந்து விலகவும் ஒப்புக் கொண்டார்.
டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்டிக்கும் விதத்தில் பேஸ்புக் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் தளத்தை பயன்படுத்த காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப், அதற்கு பழி வாங்குவது போல் செயல்பட்டு வருவது, அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கலிபோர்னியாவின் முன்னாள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகளான டங்கன் ஹண்டர் மற்றும் நியூயார்க்கின் கிறிஸ் காலின்ஸ் ஆகியோருக்கும் டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.