Donald trump-ற்கு இராணுவ மருத்துவமனையில் சகிச்சை ... நலமாக இருப்பதாக ட்வீட்..!!

நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தல்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டபடி,   பேரணிகளை நடத்த வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2020, 09:51 AM IST
  • நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தல்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டபடி, பேரணிகளை நடத்த வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது
  • அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு வியாழக்கிழமை இரவு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
Donald trump-ற்கு  இராணுவ மருத்துவமனையில் சகிச்சை ...  நலமாக இருப்பதாக ட்வீட்..!! title=

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து,  தனது மருத்துவர் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படி,  அடுத்த சில நாட்களுக்கு வால்டர் ரீட் மருத்துவமனையில் தங்கியிருப்பார்.

நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டபடி,   பேரணிகளை நடத்த வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு வியாழக்கிழமை இரவு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அனைவருக்கும் ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்து ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் " மகத்தான ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் செல்கிறேன். நான் மிக நன்றாக இருக்கிறேன். எனது மனைவியும் நன்றாகவே இருக்கிறார்" என்றார்.

மேலும் படிக்க | அதிர்ச்சித் தகவல் : அமெரிக்க அதிபர் Donald Trump-ற்கு கொரோனா தொற்று..!!!

முன்னதாக, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி, "மிகுந்த எச்சரிக்கையுடன்", டிரம்ப் அதிபர் அலுவலக பணிகளை அடுத்த "சில நாட்கள்" மருத்துவமனையில் இருந்து பணியாற்றுவார் "என்று கூறியிருந்தார்.

டிரம்பின் வயது மற்றும் எடை காரணமாக அதிக ஆபத்து உள்ளது. அவர் பதவியில் இருந்த காலத்தில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார், ஆனால் தவறாமல் உடற்பயிற்சி செய்தாரா அல்லது ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

வெள்ளை மாளிகையின் மருத்துவர் சீன் கான்லி ஒரு அதிகார பூர்வ அறிக்கையில் கூறியதாவது: "இந்த (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நிலவரப்படி அதிபர் சோர்வாக இருக்கிறார், ஆனால் நல்ல மனநிலையுடன் இருக்கிறார். அவர் ஒரு நிபுணர் குழு கண்காணித்து வருகிறது " என்றார்

74 வயதான டிரம்பிற்கு லேசான காய்ச்சல் உள்ளது, மேலும் அவர் ஒரு சோதனை மருந்து காக்டெய்ல் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் சோர்வாக இருந்தாலும், உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியா அஜர்பைஜான் மோதலுக்கான காரணம் என்ன..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News