ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி சென்ற மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.
நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது. 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.
புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பெற்ற டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக பைனலுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், துவக்க வீரரான முரளி விஜய் ஆஸ்திரேலிய தொடரின் போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாத காரணத்தால் விலகி உள்ளார். இந்த போட்டியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது.
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தால் 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது.
பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.
நியூசிலாந்து வீராங்கனைகளை 25.3 ஓவருக்குள் ஆல்அவுட்டாக்கிய இந்தியா, 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என சற்று முன் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்றும், இந்திய அணியின் பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 191 ரன்கள் இலக்கை அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி-20 போட்டி நேற்று கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் தவான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர்.
> 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
> 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 18-வது லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதாவது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றியை உறுதி செய்யும் உத்வேகத்தில் இருக்கிறது.
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள். அவருக்கு வயது 36.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
1) 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் இவர் பிறந்தார்.
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.
நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5_வது ஒருநாள் கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ்ஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 206 ரன்கள் தேவைப்பட்டது.
தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 37_வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலாவது ஆட்டம்:- மழையால் பாதியில் ரத்தானது
இரண்டாவது ஆட்டம்:- இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஆட்டம்:- இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4-வது போட்டி:- வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ரன்களை குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ரனக்ளுடனும், ராஸ்டன் சேஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என்ற முன்னிலையில், 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சையே தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய வீரர் ரஹானேவும், ஷிகர் தவானும் தனது பேட்டிங்கை தொடங்கினர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.
இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை விடாததால் மீதி ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராகக் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிவிட்டதாக டுவிட்டரில் அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியுடன் அனில் கும்ப்ளே செல்லவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.