இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: கடைசி ஒரு நாள் போட்டி; வெல்வது யார்?

Last Updated : Jul 6, 2017, 01:20 PM IST
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: கடைசி ஒரு நாள் போட்டி; வெல்வது யார்? title=

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது. 

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. 

முதலாவது ஆட்டம்:- மழையால் பாதியில் ரத்தானது

இரண்டாவது ஆட்டம்:- இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஆட்டம்:- இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

4-வது போட்டி:- வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது. 

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல்:-

இந்தியா: ஷிகர் தவான், ரஹானே, விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது யுவராஜ்சிங் அல்லது ரிஷாப் பான்ட், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

வெஸ்ட் இண்டீஸ்: எவின் லீவிஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஜாசன் முகமது, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரோவ்மன் பவெல், ஆஷ்லே நர்ஸ், தேவேந்திர பிஷூ, அல்ஜாரி ஜோசப், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 

Trending News