முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் சேர்ப்பு!!

Last Updated : Jul 17, 2017, 04:51 PM IST
முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் சேர்ப்பு!! title=

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், துவக்க வீரரான முரளி விஜய் ஆஸ்திரேலிய தொடரின் போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாத காரணத்தால் விலகி உள்ளார். இந்த போட்டியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

16 பேர் கொண்ட இந்திய அணி:– விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.

Trending News