உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்! தொண்டர்களுக்கு ட்வீட் போட்ட துணை முதல்வர்

Tamil Nadu Latest News: உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில் கொள்ளுங்கள் -உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2024, 01:53 PM IST
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்! தொண்டர்களுக்கு ட்வீட் போட்ட துணை முதல்வர் title=

Udhayanidhi Stalin Birthday News: நாளை மறுநாள் தனது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவதை ஒட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்திருக்கிறார். அதுக்குறித்து விவரங்களை பார்ப்போம்.

நாளை மறுநாள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அந்த நாளில் கட்சித் தொண்டர்களுக்கான ஒரு வேண்டுகோளாக தற்பொழுது ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தள பகக்த்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், என்னை பொறுத்தவரை பிறந்தநாள் என்பது மற்ற நாள்களைப் போல அதுவும் ஒரு நாள்தான். ஆனால் இளைஞரணி செயலர்கள் உள்ளிட்ட கழகத் தொழர்களும் தன்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்களும் காட்டும் பேரன்பும் ஆதரவும் என் பிறந்த நாளை சிறப்பான நாளாக மாற்றி இருக்கிறது என்பதனை மேற்கோள் காட்டி உள்ளார். 

திருமண விழாக்களை கொள்கை பரப்புரை செய்யும் வாய்ப்பாக கருதி அதையே கொள்கையை விளக்க நிகழ்வாக மாற்றி இருப்பது திராவிட இயக்கத்தினுடைய சாதனை எனவும், அந்த வகையில் பேரறிஞர் அண்ணா, பெரியார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் என்ன குறிப்பிட்டு அதே வழியில் தமிழ்நாடு முதலமைச்சருடைய பிறந்தநாளையும் கொள்கை திருவிழாக கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வரக்கூடிய நிலையில், அந்த வகையில் ஒரு ஆக்கப்பூர்வமான பிறந்தநாளாக தனது பிறந்தநாளை கட்சி தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தனது பிறந்தநாளை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட், "என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது. 

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய இந்தப்  பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில்கொள்ளுமாறு, உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க - “விரக்தி, ஏமாற்றம்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

மேலும் படிக்க - மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்

மேலும் படிக்க - திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் - திண்டுக்கல் சீனிவாசனுக்கு முத்தரசன் பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News