இன்று.. ‘தல தோனி’-யின் பிறந்த நாள் - அவரை வாழ்த்துவோம்!!

Last Updated : Jul 8, 2017, 01:12 PM IST
இன்று.. ‘தல தோனி’-யின் பிறந்த நாள் - அவரை வாழ்த்துவோம்!! title=

இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள். அவருக்கு வயது 36.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.

அவரை பற்றி சில...

1) 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் இவர் பிறந்தார்.

2) ஒரு கிரிக்கெட் வீரரான டோனி கால்பந்துக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு கோல்கீப்பர் ஆவார். அவரின் திறமையை பார்த்து, அவரது குழந்தை பருவ பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி, அவரை கிரிக்கெட் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

3) டோனி 2001-ம் ஆண்டு முதல் 2003 வரை, மிட்னாபூரில் தென்கிழக்கு இரயில்வேயின் கீழ், கராக்பூர் இரயில் நிலையத்தில் டிரேடிங் டிக்கெட் பரிசோதனையாளராக (டி.டி.இ.) இருந்தார்.

4) 2004-ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று சிட்டகாங்கில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனி தனது முதல் ஒருநாள் ஆட்டத்தைத் தொடங்கினார். அந்த ஆட்டத்தில் அவர் முதல் பந்திலேயே அவுட் ஆனார். 

5) விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார் டோனி. அன்று முதல் அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் தனது சாதனைகளை தொடர்ந்தார். 

6) ராகுல் டிராவிட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் 2007-ம் ஆண்டு டோனி தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

7) டோனி தலைமையின் கீழ், இந்தியா அணி, 20 ஓவர் ஐசிசி உலக கோப்பை (2007), ஐசிசி உலக கோப்பை (2011), ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை (2013) ஆகியவற்றை வென்றது.

8) அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில்,  2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என டோனி அறிவித்தார்.

9) டெஸ்டில் மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருந்தார். அவர் கேப்டனாக இருந்த போது இந்தியா 27 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 21 வெற்றிகளான சவுரவ் கங்குலியின் சாதனையை வீழ்த்தினார்.

10) ஒருநாள் சர்வதேச போட்டிகளில் டோனி அதிகபட்ச ஸ்கோர் 183* ஆகும், இது அவரது 22 வது ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக வந்தது. நவம்பர் 2011ல் இந்திய இராணுவத்தால் லெப்டினல் கேணல் பதவியில் டோனி நியமிக்கப்பட்டார்.

Trending News