இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: 3-1 கணக்கில் தொடரை வென்றது இந்திய!!

Last Updated : Jul 7, 2017, 10:26 AM IST
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: 3-1 கணக்கில் தொடரை வென்றது இந்திய!! title=

கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.

நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5_வது ஒருநாள் கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ்ஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 206 ரன்கள் தேவைப்பட்டது.

தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 37_வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது. 

விராட் கோலி(111*) சதம் அடித்தார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்(50*) அரை சதம் அடித்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

ஆட்ட நாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக அஜிங்கிய ரஹானேவும் தேர்வு செய்யப்பட்டார்.

Trending News