தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன். தமிழில் பேசமுடியாததற்க்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன விதிமுறைகளை ஆராய்ந்து பார்த்த பின், தலைமை நீதிபதிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை தள்ளுபடி செய்தேன். என வெங்கையா நாயுடு கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மீண்டும் வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்திய நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
M Venkaiah Naidu takes oath as the next Vice President of India pic.twitter.com/BHQGKy4gWC
— ANI (@ANI) August 11, 2017
நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் வாயிலாக வெங்கய்ய நாயுடுவுக்கு, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
இந்திய நாட்டின் 13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியிடப்பட்டது. அதன்படி 272 வாக்குகள் வித்தியாசத்தில் துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தூய்மை குறித்து ஆய்வு 434 நகரங்களில், 37 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. அதன் முடிவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இந்த பட்டியலில், முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் உள்ளது. அதனை தொடர்ந்து போபால்(மத்திய பிரதேசம்), விசாகப்பட்டினம்(ஆந்திர பிரதேசம்), சூரத்(குஜராத்), மைசூரு(கர்நாடகம்), திருச்சி(தமிழ்நாடு), டெல்லி, நவிமும்பை(மகாராட்டிரா), திருப்பதி(ஆந்திர பிரதேசம்), வதோதரா(குஜராத்) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.
நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மூன்று முறை தலாக் கூறுவதையும், ஒரே சிவில் சட்டத்தையும் முஸ்லீம் வாரியம் ஒன்றாக பார்க்க வேண்டாம் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: மூன்று முறை தலாக் கூறும் முறையையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக இணைத்து பார்க்கக்கூடாது. இதில் அரசியல் செய்யக்கூடாது. மூன்று முறை தலாக் கூறப்படுவது பொது சிவில் சட்டத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் முக்கியமானது, பாலின நீதி, பெண்களின் மாண்பு, பாகுபாடு பார்க்க்கூடாதது ஆகியவை ஆகும்.
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமைச் செயலக வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 197 புதிய அரசு பஸ்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் - சின்னமலை இடையிலான, மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும் அறிவுசார் மையம், மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான அடிக்கல் நாட்டப் பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும் அறிவுசார் மையம், மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான அடிக்கல் நாட்டப் பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.