மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.
நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதை ஆலோசனையில் ராஜ்நாத் சிங் , அருண் ஜெட்லி , வெங்கையா நாயுடு , பியூஸ் கோயல் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஆர்பிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்:- வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நடைபெற்று வரும் பண விநியோகம் மற்றும் பணம் தேவை குறித்து பிரதமர் ஆய்வு நடத்தினார். மேலும் மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தேவையான வழிகளை பற்றி கேட்டறிந்தார். பண விநியோகிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.