இன்று நள்ளிரவு வரையில் மட்டுமே பொதுமக்கள் தங்களுடைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியும், இன்று நள்ளிரவுக்கு பின்னர் சலுகையை நீட்டிக்ககூடாது என்ற மத்திய அரசு முடிவு.
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி உரையாற்றி வருகிறார்.
பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படும் இடங்கள்:-
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் நீங்கள் இந்த மாற்றத்துக்கு ஆதரிக்கிறீர்களா என்று நேரடியாக பதில் கேட்டுக்கொண்டிருந்தார்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளை நோக்கி செல்கின்றனர்.
ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்கமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் ரூ. 2 ஆயிரம் நோட்டு ஏடிஎம் மையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை பயன்படுத்தலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக மக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். ஏடிஎம் மூலமாகவும் மக்கள் பணம் பெற்று வருகிறார்கள். 5-வது நாளாக இன்றும் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை.
மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.
நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 உயர்த்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகம்.
பாகுபலி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நகரங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை, சண்டீகர் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு சோதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள பாகுபலி பட தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.