மும்பை மற்றும் கோவா இடையேயான தேஜஸ் ஏ.சி. ரெயில் சேவை திங்கள் அன்று தொடங்கியது.
உலகத்தரத்திற்கு ஈடாக தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரெயிலில் பயோ-வேக்கம் கழிவறைகள், இன்டிகேட்டர்கள், தானியங்கி கதவுகள், அதிநவீன ஏர் பிரேக், கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு பயணிக்கும் ஜி.பி.எஸ். வசதி கொண்ட தொடு திரை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், போதிய பயண ஆவணங்கள் இல்லை எனக் கூறி சாலையில் நடந்து சென்ற இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைத்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையை சேர்ந்த செயிக் நபி அகமது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பையில் இதய பாதிப்புடன் பிறந்து 12 மணி நேர அறுவை சிகிச்சை மற்றும் 6 மாரடைப்புக்கு பின்னர் பிழைத்த குழந்தையை மருத்துவமனையில் உள்ளவர்கள் அதிசய குழந்தை என பெயர் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக டாக்டர் கூறியதாவது:-
சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் தற்போது வரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், விராட் கோலி காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததால், பெங்களூருவில் நாளை (ஏப்ரல் 14-ம் தேதி) நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் 19-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜுன் பர்தவாஜ். மும்பையில் இருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்டு ஓட்டலில் தங்கி வந்துள்ளார். சில காலமாகவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த பரத்வாஜ், கடும் மனச் சோர்வுக்கு ஆட்பட்டு இருந்துள்ளார். இதனால், நேற்று மாலை 6.30 மணி அளவில், ஃபேஸ்புக் லைவின் மூலம் பேசிவிட்டு, ஓட்டலின் 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டுவருகின்றன. இதில், மும்பை மாநகராட்சியைப் பொருத்தவரையில், இந்த முறை பா.ஜ.க.வும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன.
மும்பை உட்பட மராட்டிய மாநிலத்தில் 10 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தல் களத்தில் 10 மாநகராட்சிகளிலும் உள்ள 1,268 வார்டுகளில் மொத்தம் 9,199 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பை மாநகராட்சியில் மட்டும் 2 ஆயிரத்து 271 பேர் போட்டியிடுகிறார்கள்.
மும்பையில் டாடா கேன்சர் மருத்துமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரேல் பகுதியில் டாடா மெமோரியல் கேன்சர் மருத்துமனை இயங்கி வந்தது. இந்த மருத்துமனையின் அடித்தளத்தில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுமார் 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த விபத்து குறித்து போலீசாரும் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் குர்லா - அம்பேர்நாத் இடையே ஓடும் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது.
மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து, தாக்குதலின்போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தர்காவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.
மும்பை நகரில் டிரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு டிரோன் ஒன்று பறந்ததை கண்டதாக விமானி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மும்பை நகரம் முழுவதும் அலெர்ட் செய்யபட்டுள்ளது.
மும்பையில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் காணப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது
மும்பை கடற்படை தளம் அருகே கருப்பு நிற உடையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதை பார்த்ததாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர், இதனையடுத்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உரான் கடற்படை தளம் அருகே யுஇஎஸ் பள்ளி மாணவர்கள் சந்தேகத்திற்கு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.