மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் மும்பை மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மும்பை மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வரும் நிலையில் இன்று காலை முதல் நீண்ட நேரத்திற்கு கனமழை பெய்ததால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும் கடலிலும் சீற்றம் காணப்படுகிறது. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நீல திமிங்கல சவால்களின் இணைப்புகளை ஏன் நீக்கவில்லை என பேஸ்புக், கூகுள் மற்றும் யாகூவிடம் பதில்களை கோரியுள்ளது.
கூடுதலாக, சென்டர் மற்றும் தில்லி போலீஸாரும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளின் இணைப்புகளை நீக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட ஆபத்தான ஆன்லைன் விளையாட்டு "நீல திமிங்கில சவால்களின்" இணைப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு கூகிள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ இணையங்களில் முன்னதாக இந்த விளையாட்டின் இணைப்பு இயக்கிவந்தது.
மும்பையில் ஒரு அரிய சம்பவம், 45 வயதான பெண் தனது மருமகளை காப்பாற்ற தன் சொந்த மகனைக் கொன்றுள்ளார்.
அன்வாரி இட்ரஸியின் இளைய மகன் நதீம், இவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி, மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் நதீம்ன் மனைவி அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேறியது.
ஏஎன்ஐ-இன் தகவல்களின்படி, ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு நதீம் வீட்டில் குடித்துவிட்டு வந்துள்ளார். பிரச்னை ஏதும் நிகழாமல் இருக்க அன்று இரவு இட்ரஸி தனது இரண்டு மூத்த மகன்கள், மருமகள்களையும் பக்கத்துக்கு வீட்டில் தூங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளார்.
ரயில் நிலையங்களில் ரூ.,1 சிகிச்சை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
அண்மையில் ரூ.,1 ஒரு பாட்டில் தண்ணீர் தர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வரும் நிலையில் இந்த விளையாட்டை நிறுத்தும்படி 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
ப்ளூ வேல் எனும் ஆன்லைன் விளையாடிற்கு சமீபக காலமாக, சிறார்களா பெரிதும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டல் இந்தியாவில் பலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புது டெல்லி இந்தோரை சேர்ந்த 14 வயது சிறுவன் ப்ளூ வேல் விளையாட்டிற்கு அடிமையாகி தனது பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரை சகமாணவர்கள் காப்பாற்றினார்.
நேற்று (ஆகஸ்ட் 7) திங்களன்று மும்பையில் பெண்மணி ஒருவரின் சடலம் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், 65 வயது மதிக்கத்தக்க ஆஷா சஹானி என்ற பெண்மணி அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அவருடைய மகன் அமெரிக்காவில் மென்பொறியியலாளரக பணிபுரிவதாகவும் தெரியவந்தது.
அவரது கணவர் இறந்த பிறகு ஆந்தேரியில் உள்ள லோகந்த்வாலா வளாகத்தில் தனியாக தங்கியிருந்தார். அவரது ஒரே மகன் ரித்தூராஜ் ரோட்டரஜால் ஒரு மென்பொருள் பொறியாளர் ஆவார்.
மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தன் குழந்தைகள் கண்முன் மனைவியின் தலையை வெட்டி கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நலாசோபாரா (கிழக்கு), சந்தோஷ் புவனில் உள்ள ஷர்மமாடி யாதவ் சாவ்லில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது.
மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜய் யாதவ் (35) என்பவர் அவரது மனைவி சரோஜாவின் (28) தலையை விடியற்காலை 1 மணியளவில் கூர்மையான கத்தியால் வெட்டி கொன்றுள்ளார்.
கொலை நடந்தபின், யாதவ் தனது மூன்று குழந்தைகளையும், ரம்ஜியவனவில் இருக்கும் தன் தந்தையிடம் அழைத்துச் சென்ற விட்டுள்ளார்.
மும்பை சிறுவன் தற்கொலைக்கு பிறகு இனி இதுபோல் சம்பவங்கள் நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் "ப்ளூ வேல்" விளையடிற்கு அனுமதி அளிக்ககூடாது எனவும் இன்று ராஜ்ய சபாவில் விவதிகப்பட்டது.
முன்னதாக திங்களன்று மும்பையில், 14 வயதான மன்ர்பீட் சஹான்ஸ், 'நீல திமிங்கில சவாலினால் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் உறுதி செய்தனர்.
நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?
நேற்று திங்களன்று மும்பையில், 14 வயதான மன்ர்பீட் சஹான்ஸ், 'நீல திமிங்கில சவாலினால் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் உறுதி செய்தனர்.
முன்னணி நாளிதழான இந்தியா டுடே வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மன்ர்பீட் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இணையத்தளத்தில் மொட்டை மாடியில் இருந்து குதித்ததற்கான வழிகளை தேடிக்கொண்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை தனது பள்ளியை விட்டு வெளியேறும்போது, இறந்த மன்ர்பீட் தனது நண்பர்களிடம் திங்களன்று தான் பள்ளிக்கு வரபோவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில்பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர்.
மும்பையில் கடந்த சில தினமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காட்கோபர் பகுதியில், 35 ஆண்டுகள் பழமையான, நான்கு அடுக்குமாடி குடியிருப்பு, பலத்த மழை காரணமாக, நேற்று இடிந்து விழுந்தது. அங்கு வசித்தவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
மும்பை காட்கோபர் புறநகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உட்பட 12 பேர் பலியானார்கள். இடிந்து விழுந்த அந்த கட்டடத்தில் 12 குடும்பங்கள் குடியிருந்தன.
மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர்.
மும்பை காட்கோபர் புறநகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உட்பட 12 பேர் பலியானார்கள். இடிந்து விழுந்த அந்த கட்டடத்தில் 12 குடும்பங்கள் குடியிருந்தன.
இந்த வினைத்து இன்று காலை 10.43 மணியளவில் கட்டிடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்து தரை மட்டமானது.
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த லீக் தகவலை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.
மிக குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன.
மும்பையில் மின்சார துண்டிப்பு காரணமாக மோனோ ரயில் ஒன்று செம்பூர் நிலையத்தை நெருங்கும் போது திடீரென நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, நிறுத்தப்பட்ட ரயிலை மீட்பதற்காக உடனடியாக அதிகாரிகள் வாடாலா டிப்போவில் இருந்து மற்றொரு ரயிலை வர வழைத்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரயிலோடு புதிதாக வரவழைக்கப்பட்ட ரயில் இணைக்கப்பட்டு, பிளாட்பாரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுவது போன்ற காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் அபு சலீம், முஸ்தபா தோசா மற்றும் 4 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டையே உலுக்கிய மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
1993-ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மொத்தம் ரூ 27 கோடி மதிப்பிலான சொத்துகள் நாசமாகின.
நாட்டையே உலுக்கிய மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
1993-ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மொத்தம் ரூ 27 கோடி மதிப்பிலான சொத்துகள் நாசமாகின.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும் இவ்வழக்கில் முக்கிய விசாரணை 2006-ம் ஆண்டு நிறைவு பெற்று 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
கோவா - மும்பை இடையே இயக்கப்படும் அதிவேக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டாலும், ஒரு நிமிடம் முன்னதாகவே மும்பையை அடைந்து சாதனை படைத்துள்ளது.
மே, 22-ம் தேதி இந்த ரயில் சேவையை பிரபு துவக்கி வைத்தார்கள். தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், 13 அதிநவீன பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. பல நவீன வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் அதிகபட்சமாக, மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.
உணவுப் பழக்கம் வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் நானும் ஒரு அசைவ பிரியர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து களைக்கட்டியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.