26/11 தாக்குதலின் 8 -வது ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து, தாக்குதலின்போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

Last Updated : Nov 26, 2016, 11:23 AM IST
26/11 தாக்குதலின் 8 -வது ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி title=

மும்பை: மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து, தாக்குதலின்போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கருப்பு நாள் 26.11.2008. பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் அதிபயங்கர தாக்குதலை நடத்தினார்கள்.

கடல் மார்க்கமாக ஊடுருவி மும்பை சி.எஸ்.டி., காமா ஆஸ்பத்திரி, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரெடெண்ட் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள், அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் மும்பை மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை கொடுத்தது.

இந்தநிலையில் அந்த தாக்குதலின் 8-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதையொட்டி மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை அதிகாரிகளில் தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்  சலாஸ்கர் உள்பட பலரும் அடங்குவர். இந்த தாக்குதலின் 8-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் நடந்ததன் 8 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மகாராஷ்டிரா கவர்னர், முதல்வர் பட்நாவீஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜூலியோ ரிபேரியோ, மூத்த உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவல் பணி காரணமாக வெளியூர் சென்றுள்ளதால், அஞ்சலி நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. 

அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் பட்நாவீஸ் கூறுகையில், "மும்பை தாக்குதலில் மக்களின் பாதுகாப்புக்காக உயர் தியாகம் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். மாநிலத்தின் பாதுகாப்புக்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறை நவீனப்படுத்தப்படும். சிறந்த ஆயுதங்கள் வழங்கப்படும். இதுவே எங்களின் முன்னுரிமையாக இருக்கும்" என்றார்.

Trending News