ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களுக்கும் அனுமதி

Last Updated : Oct 24, 2016, 04:48 PM IST
ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களுக்கும் அனுமதி title=

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தர்காவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.

நூர்ஜெஹான் நியாஜ் மற்றும் ஜாகியா சோமன் தொடரப்பட்ட பொது நல வழக்கில் கூறியதாவது:- குரான் மற்றும் அரசியல் சாசனம் அடிப்படையிலும் எங்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன் வரை பெண்கள் தர்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர் எனக்கூறினார்கள். 

மேலும் மகாராஷ்டிரா அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:- பெண்களுக்கு தடை விதிக்க தர்கா நிர்வாகத்திற்கு உரிமையில்லை. தொழுகை நடத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முழு உரிமை உள்ளது. பெண்களுக்கு தர்காவில் தொழுகை நடத்த நிர்வாகம் தடை விதிப்பது பாலின சமநிலையை மீறும் செயலாகும் எனக்கூ றியது.

இவ்வழக்கின் போது தர்கா நிர்வாகம் சார்பில்:- தர்காவிற்குள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறப்பட்டுள்ளது. மும்பை ஐகோர்ட் தீர்ப்பை அமுல்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து தர்கா நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. 

இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி டி எஸ் தாக்கூர், சந்திரசுத் மற்றும் நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்கா நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஹாஜி அலி தர்காவுக்குள் ஆண்களுக்கு இணையாக இனி பெண்களையும் அனும திக்க தர்கா நிர்வாகம் தீர்மானித்துள்ளது என தெரிவித்தார். இதனை நடைமுறைப்படுத்தவும், தர்காவுக்குள் பெண்கள் வருவதற்கு வசதியாக தேவையான கட்டமைப்புகளை மா ற்றம் செய்யவும் 4 வார கால அவகாசம் வேண்டும் என கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். 

Trending News