நீட் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை தருகிறது என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அணுக் கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் 'ரம்ஜான்' திருநாள் வாழ்த்துச் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சக்திகளை கண்காணிப்போம், அவற்றை தடுப்போம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தமிழக அரசின் திருமண நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயாக இருந்து வருகிறது. இதேபோல், ஏழை, விதவை குழந்தைகளுக்கான இலவச பாடநூல், குறிப்பேடு வழங்கும் திட்டத்துக்கும் 24 ஆயிரம் ரூபாயாக வருமான உச்சவரம்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அரசின் இத்திட்டங்களில் ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும் அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.