திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பு 72 ஆயிரம் ஆக உயர்வு!

தமிழக அரசின் திருமண நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயாக இருந்து வருகிறது. இதேபோல், ஏழை, விதவை குழந்தைகளுக்கான இலவச பாடநூல், குறிப்பேடு வழங்கும் திட்டத்துக்கும் 24 ஆயிரம் ரூபாயாக வருமான உச்சவரம்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அரசின் இத்திட்டங்களில் ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

Last Updated : Jun 1, 2019, 02:49 PM IST
திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பு  72 ஆயிரம் ஆக உயர்வு! title=

தமிழக அரசின் திருமண நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயாக இருந்து வருகிறது. இதேபோல், ஏழை, விதவை குழந்தைகளுக்கான இலவச பாடநூல், குறிப்பேடு வழங்கும் திட்டத்துக்கும் 24 ஆயிரம் ரூபாயாக வருமான உச்சவரம்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அரசின் இத்திட்டங்களில் ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் சில நலத்திட்டங்களை பெற வருமான வரம்பு ரூ.24000-லிருந்து ரூ.72000 மாக உயர்த்தப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில், திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பு ரூ.24000 லிருந்து ரூ.72000 மாக உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக  பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்கள் ,தொழில் பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் 3-ஆம் பாலினர் நலத்திட்ட உதவிகள் ஆகிய திட்டங்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பு  ரூ.24000 லிருந்து ரூ.72000 மாக உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News