தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் 'ரம்ஜான்' திருநாள் வாழ்த்துச் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அதுக்குறித்து இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:-
புனித ரமலான் பெருநாளில், உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்திட வேண்டும் என்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘‘ரம்ஜான்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் இஸ்லாமியப் பெருமக்கள் பகலில் உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இறை உணர்வோடு நோன்பிருந்து, ஏழை மக்களின் ஏழ்மையை போக்கி பசியாற உணவு அளித்து, செல்வமும் வழங்கி, அனைவரும் நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட சிறப்புத் தொழுகை செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
இப்புனித ரமலான் பெருநாளில், அனைவருடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழுங்கள் என்ற நபிகள்நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்ப்போம் என்றுக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.