சென்னை: அங்கீகாரமும் மற்றும் அடிப்படை வசதிகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருவள்ளூவர் மாவட்டத்தில் ஆவடி பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின் படி மாணவர்கள் சேர்கை நடைபெற வில்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லை. கட்டிடம் சரியாக இல்லை. போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து மே 24 ஆம் தேதி தமிழக அரசிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் அந்த மனு மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து மனுதாரர் தரப்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்பொழுது தமிழக அரசு சார்பில், அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்படும் 903 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும், அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறி மனுதாரரின் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.