அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடிகளில் உங்களுக்கு பிடித்த படங்கள், வெப்சீரிஸ், நிகழ்ச்சிகள் உள்ளதா, அதை தனியாக கட்டணம் செலுத்தி பார்க்க இயலவில்லையா, இதோ உங்களுக்கு ஒரு அருமையான தீர்வு. நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் என்றால், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களை இலவசமாக பெற முடியும்.
அந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் என்பது வழக்கம்போல் உங்களின் டேட்டா, கால் வசதிகளுக்கு செலுத்துவது மட்டும்தான். ஓடிடி என்று கூடுதலாக கட்டணம் தேவையில்லை முற்றிலும் இலவசமாக வருகிறது. ரூ. 499 / ரூ. 600 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன்மூலம், இலவச எஸ்எம்ஸ், அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளுடன் இலவச அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெற முடியும்.
ஏர்டெல் தனது ரூ. 499 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.499 திட்டத்தின் வேலிடிட்டி 3 மாத காலங்களுக்கு இருந்த நிலையில், தற்போது இந்த ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம், பிரபலமடைந்திருப்பதன் காரணமாக வேலிடிட்டி நாட்களை வெறும் 29 நாட்களாக குறைக்கப்பட்டது.
மேலும் படிக்க | வருஷம் முழுவதும் மின்சார கட்டணமே வராமல் இருக்கனுமா? இதை செய்தால் போதும்
ஏர்டெல் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதனுடன், ஏர்டெல் தேங்க்ஸ்ஆப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் கூடுதல் நன்மைகளையும் ஏர்டெல் வழங்குகிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் மொபைலின் 3 மாத சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இருப்பினும், நீங்கள அமேசான் பிரைம் வீடியோ சேவையை இலவசமாக பெற விரும்பினால், 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ரூ.699 ரீசார்ஜ் திட்டத்தைதான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த திட்டத்தில், ஏர்டெல் அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதனுடன், ஏர்டெல் தேங்க்ஸ்ஆப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் கூடுதல் பலன்களையும் ஏர்டெல் வழங்குகிறது. அமேசான் பிரைமுக்கான இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கு கிடைக்கும்.
சாதரணமாக, டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா மொபைல் பயனர்களுக்கு 499 ரூபாய் கட்டி சந்தாதாரராக வேண்டும். அமேசான் பிரைம் சந்தா ஆண்டுக்கு ரூ.1499 ஆக இருக்கிறது. எனவே, இந்தத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இதுபோன்ற பிற திட்டங்களையோ நீங்கள் தேர்வுசெய்தால், உங்களின் பட்ஜெட்டில் பெரிய அடி விழுகாது.
மேலும் படிக்க | Jio vs Vodafone Idea? ரூ249 ரீசார்ஜ் திட்டம், எது பெஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ