கருவை கலைக்க சொல்லும் தமிழக கிரிக்கெட் வீரர் - பெண் புகார்

Allegation On Rajagopal Sathish: தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷால் நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கும் பெண் ஒருவர், தற்போது கரு கலைப்பு செய்ய சொல்லி அவர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2023, 08:36 PM IST
  • ராஜகோபால் சதீஷின் மனைவி மற்றும் தோழி மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • புகார் அளித்த பெண்ணும், ராஜகோபால் சதீஷும் 2 ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
  • ராஜகோபால் சதீஷ் டிஎன்பிஎல் தொடரில் விளையாடுகிறார்.
கருவை கலைக்க சொல்லும் தமிழக கிரிக்கெட் வீரர் - பெண் புகார் title=

Allegation On Rajagopal Sathish: சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் மோனிஷா (31). அதே பகுதியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ். இவர் டிஎன்பிஎல் தொடரில் விளையாடி வருகிறார். மோனிஷா ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இதில், மோனிஷா, ராஜகோபால் சதீஷ் இருவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ராஜகோபால் சதீஷ் மோனிஷாவை காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, ராஜகோபால் சதீஷின் காதலை ஏற்றுக்கொண்டு, மோனிஷாவும் அவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் இருவரும் பெருங்குடியில் உள்ள ராஜகோபால் சதீஷ் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் ராஜகோபால் சதீஷின் சொந்த ஊரான திருச்சிக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ராஜகோபாலுக்கு திருமணம் ஆகியிருந்தது மோனிஷாவுக்கு தெரியவந்தது. இதனால் ராஜகோபாலுடனான தொடர்பை துண்டித்து விட்டு, 2022ஆம் ஆண்டு மோனிஷா பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும்,  சில கருத்து வேறுபாடு காரணமாக அவர்களும் மூன்று மாதங்களில் புரிந்து விட்டனர். 

மேலும் படிக்க | சூதாட்ட புகார்: முன்னாள் சிஎஸ்கே வீரர் வெளிநாடு செல்ல தடை!

இதை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு செல்போனில் தொடர்பு கொண்ட ராஜகோபால் சதீஷ் நண்பர்களாக பேச வேண்டும் என்று கூறியதன் பேரில் மீண்டும் இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், நண்பர்களோடு கொடைக்கானல் சென்று ஒன்றாக இருந்ததால் தற்போது மோனிஷா நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் ராஜகோபால் சதீஷ் தூண்டிதலின் பேரில் அவரது மனைவி சாம்பவி, அவரது தோழி சுரேகா ஆகியோர் கரு கலைப்பு செய்ய சொல்லி மிரட்டுவதாகவும் அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அடையார் துணை ஆணையர் அலுவலகத்தில் மோனிஷா புகார் அளித்துள்ளார். அதன் பேரில் புகாரை, தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

யார் இந்த ராஜகோபால் சதீஷ்?

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் சதீஷ் தற்போது உள்ளூர் முதல் தர போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் அணிக்காக விளையாடியுள்ளார். தமிழ்நாடு அணியில் வாய்ப்பில்லாத நிலையில், 2003ஆம் ஆண்டில் அஸ்ஸாம் அணிக்காக விளையாடியுள்ளார். முதல் தர போட்டியில் இவரின் அதிகபட்ச ஸ்கோரான 204 ரன்களை அஸ்ஸாம் அணி சார்பாக தமிழ்நாடு அணிக்கு எதிராகவே குவித்தார். பின்னர் இவர் தமிழ்நாடு அணிக்கே திரும்பினார். 

ஐசிஎல் தொடரில் விளையாடிய ராஜகோபால் சதீஷ் பின்னர் ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் சதீஷ் இடம்பெற்றார். அவர் மொத்தம் 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 232 ரன்களை எடுத்துள்ளார். தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 

மேலும் படிக்க | இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பில்லை...? - வேகத்திற்கு இனி வேற வீரர் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News