விஜய்க்கு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்! மீறினால் கைது செய்யப்படுவாரா?

வரும் ஜனவரி 20ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக சில கட்டுப்பாடுகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன.

Written by - RK Spark | Last Updated : Jan 18, 2025, 01:54 PM IST
  • பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.
  • காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
  • இதற்காக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
விஜய்க்கு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்! மீறினால் கைது செய்யப்படுவாரா? title=

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு அதிக இடம் தேவைப்படும் என்பதால் பரந்தூர் மற்றும் 13 அண்டை கிராமங்களில் இருந்து மொத்தம் 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் பொது நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை உள்ளடக்கிய பல இடங்கள் வருவதால் ஆரம்பத்தில் இருந்தே அந்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் ஏகனாபுரம் போன்ற கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட உள்ளன. இது இந்த பகுதிகளில் தீவிரமான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது.

மேலும் படிக்க | போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்க போகும் தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!

இப்போராட்டங்கள் 908 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் 13 கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் டி.வேல்முருகன் என முக்கியத் தலைவர்கள் அனைவரும் அந்த பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

போராட்டத்தில் விஜய்

பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய், தனது முதல் மாநாட்டை அக்டோபர் 27 அன்று விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் போடப்பட்ட தீர்மானங்களில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இடமாற்றம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு நன்றி தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்காக காஞ்சிபுரம் காவல்துறையிடம் விஜய் அனுமதி கேட்டு இருந்தார். வரும் ஜனவரி 20ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக சில கட்டுப்பாடுகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

  • காவல்துறை அனுமதியளித்த இடத்தில் மட்டும் தான் மக்களை சந்திக்க வேண்டும். மற்ற இடங்களில் சந்திக்க கூடாது.
  • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வர வேண்டும். தேவையில்லாமல் அதிக கூட்டத்தை கூட்ட கூடாது.
  • காவல்துறை அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் வர வேண்டும்.
  • குறிப்பிட்ட நேரத்தில் பரந்தூர் மக்களை விஜய் சந்தித்து முடிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதி தரபட மாட்டாது.
  • எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்பட உள்ளது - காஞ்சிபுரம் காவல்துறை

இதற்கு முன்பும் போராட்ட களத்தில் விஜய்

கட்சி தொடங்கிய பின்பு விஜய் மக்களை நேரடியாக அதிக முறை சந்திக்க வில்லை என்றாலும், கட்சி தொடங்குவதற்கு முன்பு சந்தித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களுடன் விஜய் நேரடியாக கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்து இருந்தார் விஜய். கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்களை விஜய் சந்திக்க உள்ளார்.

மேலும் படிக்க | மதுரை மெட்ரோ ரயில்: திட்டத்திற்கு ஓகே சொல்லுமா மத்திய அரசு...? CMRL அதிகாரிகள் ஆய்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News