கடன் வாங்குவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு ஏதோ ஒரு கட்டத்தில் கடன் தேவைப்படுகிறது. புதிய வீடு வாங்க, பிள்ளைகளின் படிப்பு செலவு அல்லது திருமண செலவு என கடன் வாங்கும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் கடன் வாங்க வங்கியை அணுகும் அனைவருக்கும் கடன் கிடைப்பதில்லை. CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டும். சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால், கடனைப் பெறுவது கடினம்.
கிரெடிட் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 புள்ளிகள் வரையிலான மதிப்பெண் அளவு . CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் 700 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அது சிறப்பான மதிப்பெண்ணாக கருதப்படுகிறது. பல வங்கிகள் சிறப்பான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கின்றன. 300க்கும் 549க்கும் இடைப்பட்ட மதிப்பெண் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. இதேபோல், 550 முதல் 700 வரையிலான மதிப்பெண் நியாயமானதாகக் கருதப்படுகிறது. CIBIL ஸ்கோர் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு எளிதாக வங்கி உங்களுக்கு கடனை வழங்கும். அதிக கிரெட் ஸ்கோர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் (Loan Tips) கொண்டவர் என்பதை குறிக்கிறது
கிரெடிட் ஸ்கோரை சரிசெய்யும் முறை
1. CIBIL மதிப்பெண் குறைவதைத் தவிர்க்க, ஒரே நேரத்தில் பல கடன்களை எடுப்பதை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் பல கடன்களை வாங்குவதும், அதைச் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திப்பதும் பலருக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. ஒரு கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு மற்றொரு கடனைப் பெறுங்கள். ஒரே நேரத்தில் பல கடன்களை எடுப்பது உங்கள் CIBIL மதிப்பெண்ணைக் குறைக்கலாம்.
2. வீட்டுக் கடன், தனிநபர் கடன் அல்லது வாகனக் கடன் போன்ற ஏதேனும் கடனைப் பெற்றிருந்தால் அதற்கான உங்கள் EMI அல்லது நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | 8th Pay Commission Update... 8வது ஊதிய குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல்...
3. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்திருந்தாலோ அல்லது செலவு செய்திருந்தாலோ, சரியான நேரத்தில் பணம் செலுத்துவது உங்கள் CIBIL ஸ்கோரை அதிகரிக்க உதவும்.
4. கிரெடிட் கார்டுகளில் கடன் வரம்பை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வங்கி வழங்கிய முழு கடன் வரம்பையும் பயன்படுத்த வேண்டாம், பெரிய தேவை இல்லை என்றால் உங்களுக்கான வரம்பில் 30-40 சதவீதத்தைப் பயன்படுத்தவும்.
5. உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த, நீங்கள் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து, எந்த அளவில் கடன் வாங்கினால் எளிதாக திருப்பிச் செலுத்த முடியுமோ அவ்வளவு கடனைப் பெற வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ