உங்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆகப்போகிறதா... அப்போ கண்டிப்பா இந்த ரூல்ஸை படிங்க!

Passport Renewal: உங்களின் பாஸ்போர்ட் இன்னும் ஒரு வருடத்தில் காலாவதியாகப்போகிறது என்றால், உடனடியாக இந்த விதியை தெரிந்துகொள்வது அவசியம்.

பாஸ்போர்ட் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே, அது எப்போது காலாவதியாகிறது, அதனை புதுப்பிப்பது எப்படி என்பதை தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம்.

1 /8

அரசு வழங்கும் சில அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும், அதன் விதிகள் குறித்தும் மக்கள் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகிறது. குறிப்பாக, நீங்கள் உலகம் முழுக்க பயணிப்பதற்கு பயன்படும் பாஸ்போர்ட் (Passport) குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.  

2 /8

வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மட்டுமின்றி, இந்த பாஸ்போர்ட் அரசு ஆவணங்களில் மிக முக்கியமான ஒன்றாகவும் செயல்படும். இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பு என்று எதுவும் கிடையாது.  

3 /8

அதாவது 18 வயது நிறைவு செய்தால்தான் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுக்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தாலே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.  

4 /8

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவா மூலம் நீங்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதனை பெற்றுக் கொள்ளலாம்.நீங்கள் விண்ணப்பித்து பெறும் அந்த பாஸ்போர்ட் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடி (Passport Expiry) ஆகும்.   

5 /8

அந்த பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டால் அதனை நீங்கள் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். அந்த வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது குறித்த விதிகளை தெரிந்து கொள்வதும் அவசியம். அவற்றை இங்கு விரிவாக காணலாம்.  

6 /8

வயது முதிர்ந்தவருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் 10 ஆண்டுகள் வரை அது செல்லுபடி ஆகும். அதுவே 18 வயதிற்கு குறைந்தவர்கள் பாஸ்போர்ட் பெற்றால் 5 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடி ஆகும். அப்படி இருக்க, ஒருவரின் பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு  9 - 12 மாதங்களுக்கு முன்பே அதனை புதுப்பிக்க வேண்டும் (Passport Renewal) என பாஸ்போர்ட் சேவா விதிகள் கூறுகின்றன.  

7 /8

பாஸ்போர்ட்டை பெறுவதற்கு ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பிப்பதை போலவே, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் ஆன்லைன் மூலம் அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் பாஸ்போர்ட் சேவா அலுவலகத்திற்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்த நாட்களில் சென்று புதுப்பிப்பதற்கு தேவையான விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  

8 /8

பாஸ்போர்ட்டை புதுப்பிக்க 1500 ரூபாய் முதல் 2000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுப்பிப்பதற்கான தொகையையும் செலுத்தி அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு உங்களின் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் உங்களது வீட்டு முகவரிக்கு டெலிவரி ஆகிவிடும்.