Actor Santhanam Fans : சந்தானம் நடித்து பொங்கல் அன்று வெளியான மதகஜராஜா திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மதகஜராஜாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி அண்ணா சாலை ரத்னா திரையரங்கில் புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்ற தலைவர் அருண் தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் சந்தானத்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தில் சந்தானத்தின் கட் அவுட்டுக்கு மலர்கள் தூவியும் பால் அபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு 300 பேருக்கு இலவசமாக காய்கறிகள், தூய்மை பணியாளர்கள்
100 பேருக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்து சந்தனம் படத்தை காணுவகையில் இலவச திரைப்பட டிக்கெட் மற்றும் 200 பேருக்கு இலவசமாக புடவைகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து சந்தானத்தின் பிறந்த நாளை கொண்டாடும் கேக்குகள் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து ரசிகர் மன்ற தலைவர் அருண் கூறும் போது, மதகஜராஜா திரைப்படத்தை கொண்டாடும் வகையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக திரைப்பட டிக்கெட் வாங்கி கொடுத்து படத்தை காட்டி உள்ளோம் மேலும் காய்கறிகள், புடவைகள் வழங்கி கேக்குகள் வெட்டி கொண்டாடி உள்ளோம் இந்த பொங்கல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் உற்சாகமாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..
மேலும் படிக்க | வெயிட் பார்டியாக மாறிய சந்தானம்..முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ