கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில்,மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் இன்று(ஜன.18) இந்த வழக்கு சம்பந்தமாக தீர்பு வழங்கி உள்ளது. "இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64,66 மற்றும் 103(1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வழக்கில் தண்டனை விவரங்கள் நாளை மறுநாள்(ஜன.20) வெளியாகும். எனக் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனிர்பன் தாஸ் தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்டவரின் தாய்
இந்த கொடூர சம்பவம் அரங்கேறி 162 நாட்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவரின் தாய் கூறியதாவது; "சஞ்சய் குற்றவாளி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் அவர் தனியாக இல்லை.
இன்னும் சிலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே இன்னும் நீதியானது கிடைக்கவில்லை.
இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளைப் பிடித்து அவர்கள் தண்டிக்கப்படும் நாள் வரை நாங்கள் காத்திருப்போம்" எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் தந்தை கூறியதாவது; "குற்றவாளி ராய் தண்டிக்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அதேபோல் குற்றம் நடத்த இடத்தில் மேலும் 4 பேர் இருந்துள்ளனர். அவர்களை விரைவில் பிடித்து தண்டிக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிங்க: விஜய் ஹசாரே டிராபி 2024/25: அதிக ரன்கள் அடித்த வீரர்கள்.. லிஸ்ட் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ