தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளுடன்

தை மாதம் 5ம் தேதியான இன்று தைப்பூச திருநாள் உலகம் முழுவதும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமி நாளும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசத் திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2022, 08:07 AM IST
  • பக்தர்கள் இன்றி ஆலயங்களில் தைப்பூசத் திருவிழா
  • தமிழ் கடவுள் முருகனுக்கான விழா
  • கோவிட் கட்டுப்பாடுகளுடன் தைப்பூசம்
தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளுடன்  title=

தை மாதம் 5ம் தேதியான இன்று தைப்பூச திருநாள் உலகம் முழுவதும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமி நாளும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசத் திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.

அசுரர்களுடனான போரில் வெல்லமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் மூலம் தோன்றிய முருகப் பெருமானுக்கு உகந்த நாள் தைப்பூசத் திருநாள். 

அசுரர்களை வெற்றி பெற சக்தி வாய்ந்த தலைமையின் தேவையை நிறைவேற்ற சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து உருவானவர் அருட்பெரும் ஜோதியாய் விளங்கும் சிவகுமரன்.

DEVOTIONAL

வேல் உண்டு வினை இல்லை, மயில் உண்டு பயம் இல்லை
குகன் உண்டு குறை இல்லை, கந்தன் உண்டு கவலை இல்லை
என்று சரண கோஷத்துடன் பக்தர்கள், தமிழ்க் கடவுளான முருகன் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கு படை எடுப்பார்கள்.

தைமாதத்தில் பூச நட்சத்திரன்று (Thaipusam Festival) அனுசரிக்கப்படும் இந்தத் திருநாளில்தான், அன்னை பார்வதி தேவி, அறுமுகனுக்கு ஞான வேல் வழங்கியதாகவும் நம்பப்படுகிறது.

ALSO READ | தைப்பூச பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா

கந்தனின் கரத்தில் இருக்கும் ஞானவேல், தீவினைகளை போக்கும் என்று நம்பும் பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும் படையெடுத்தாலும், பழனிக்கு வந்து கடலென குவிவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் பக்தர்கள் இன்றி தைப்பூச விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
 
தைப்பூசத்தன்று (Thaipusam Festival) தான் உலகம் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. தேவ சேனாதிபதியான முருகன், தை பூசத்தன்று தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

மகன் சிவகுமரனுக்கு மட்டுமல்ல, உலகத்தையே காத்து ரட்சிக்கும் சிவபெருமானுக்கும் உகந்த நாள் தைப்பூசம் என்பதால், சிவாலயங்கள் அனைத்திலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

ALSO READ | Thaipusam 2022: பழனியில் தைப்பூசம் கோலாகல கொடியேற்றம்

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று (Thaipusam Festival) குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் வடலூரில்  தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுவார்கள்.

DEVOTIONAL

இந்த ஆண்டு, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வடலூர் 151 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவும் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

வடலூரில் தைப்பூசத்தன்று திரை விலக்கி ஜோதி தரிசனகாட்சி காண்பது சிறப்பான ஒன்று. இதைக்காண உலகின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் மக்கள் வந்து குவிவார்கள்.

வடலூர் சத்திய ஞான சபையில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகளை விலக்கி, அதன் பின் இருக்கும் ஜோதி தரிசனம் காட்டப்படும். திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் பிரதிபலிக்கும். 

அருட்பிரகாச வள்ளலாருக்கு முருகன் கண்ணாடியில் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது.

ALSO READ | பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News