தமிழக அரசின் புதிய பாடத்தொகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் -TTV!

தமிழக அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்தொகுப்பு முறை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2020, 11:15 AM IST
  • இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் பெற்றுவந்த பரந்துபட்ட அறிவை இனி மிகக்குறைந்தவர்களே பெற முடியும்.
  • போட்டித்தேர்வுகளை எழுதுவதிலும், தேசிய, உலகளவில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும், உயர்கல்வி படிப்பதிலும் தமிழக மாணவர்கள் பின்னடைவைச் சந்திப்பார்கள்.
  • காலச்சூழலுக்கு ஏற்ப பாடங்களையும், அவற்றை கற்பிக்கும் முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த மாற்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செய்யப்பட வேண்டும்
தமிழக அரசின் புதிய பாடத்தொகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் -TTV! title=

தமிழக அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்தொகுப்பு முறை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்., பாடங்களைக் குறைப்பதாக கூறி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழக அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்தொகுப்பு முறை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஆபத்து இருப்பதால் அதனை தமிழக முதல்வர் முழுவதுமாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

READ | PCR-ல் தான் கொரோனாவை கண்டறிய முடியும் என்றால் RAPID எதற்கு...? - TTV...

கல்லூரியில் எதிர்பார்க்கிற படிப்பைப் படிப்பதற்கு மட்டுமின்றி, எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால், அதற்கு மாற்றாக வேறு படிப்புகளைத்தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளோடு மேல்நிலைக்கல்வி முறை அமைந்திருந்ததும், தமிழ்நாட்டில் படித்தவர்கள் துறைகளைத்தாண்டி ஜொலிப்பதற்கு காரணமாக இருந்தது.

இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் பெற்றுவந்த பரந்துபட்ட அறிவை இனி மிகக்குறைந்தவர்களே பெற முடியும். போட்டித்தேர்வுகளை எழுதுவதிலும், தேசிய, உலகளவில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும்,உயர்கல்வி படிப்பதிலும் தமிழக மாணவர்கள் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரே பள்ளிக்கூட வளாகத்தில் பழைய பாடத்தொகுப்பு முறையும் இருக்கும்; புதிய பாடத்தொகுப்பு முறையிலும் கற்பித்தல் நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பே இந்த முடிவைச் செயல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு  உள்ள குழப்பத்தைக் காட்டுகிறது. 

READ | கொரோனா தடுப்புப்பணி: ஊழியர்களுக்கு சம்பளம், உபகரணங்கள் வழங்க வேண்டும்- TTV...

காலச்சூழலுக்கு ஏற்ப பாடங்களையும், அவற்றை கற்பிக்கும் முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த மாற்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News