சென்னை வியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு(21). கல்லூரி மாணவரான இவர் நேற்று கொளத்தூரில் உள்ள தனது நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அங்குள்ள விரைவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுள்ளார். போதை தலைக்கு ஏரி தடுமாறிய மகாவிஷ்ணுவிற்கு போதை தெளிய நண்பர்கள் எலுமிச்சை சாறு கலந்த தேநீரை வாங்கி கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த மகாவிஷ்ணு சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
மேலும் படிக்க | கணவருடனும், மகளுடனும் வாழ ஆசை - நளினியின் உருக்கமான பேட்டி
இதனை கண்ட உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்கேபி நகர் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மகாவிஷ்ணு காலாவதியான உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட விஷத்தன்மை காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பனின் பிறந்த நாள் விழாவில் மது விருந்து கலந்து கொண்ட கல்லூரி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ