திருத்தணி: வகுப்பறையின் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய மாணவன் கைது

திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2023, 06:42 AM IST
  • வகுப்பறை பூட்டுகளில் மனித மலம்
  • திருத்தணியில் நடந்த கோர சம்பவம்
  • மாணவனை கைது செய்த காவல்துறை
திருத்தணி: வகுப்பறையின் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய மாணவன் கைது title=

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 18ஆம் தேதி பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பள்ளியின் வகுப்பறை இரும்பு கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகள் பூசப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பள்ளி முன்பு போராட்டம் செய்தனர். 

இதன் எதிரொலியாக அந்த பகுதியில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், திருத்தணி காவல்துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்த பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சத்யா ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருத்தணி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். 

மேலும் படிக்க | நீட்: அதிமுக பச்சை துரோகம் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் - விளாசிய திருச்சி சிவா

இதன் எதிரொலியாக திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இதில் அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவனுடன் உள்ள நண்பர்கள் இதனை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனடிப்படையில் நான்கு மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒரு மாணவன் இந்த செயலை செய்ததை போலீசார் உறுதி செய்து,  அந்த 12 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.

அந்த மாணவன் போலீசாரிடம் கூறும்போது, " இந்த பள்ளியில் உள்ள பாலா என்ற ஆசிரியர் தொடர்ந்து என்னை தவறு செய்யாமல் இருந்தாலும் நீ தான் அந்த தவறை செய்திருப்பாய் என்று பலமுறை மாணவிகள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார். இதனால் அந்த ஆசிரியரை பழிவாங்கும் நோக்கத்துடன் எனது மனத கழிவை இரவு நேரத்தில் இந்த பள்ளியின் இரும்பு கதவுகளில் உள்ள பூட்டுகளில் மூன்று வகுப்பறைகளில் இதனை பூசினேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். 

அரசு பள்ளி வகுப்பறையில் கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகள் பூசிய விவகாரம் தமிழக அளவில் பெரிய பிரச்சினையாக இருந்தது. சினிமா பிரபலங்கள் கூட இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் பள்ளி ஆசிரியரின் அவமானப்படுத்தும் செயலால் இந்த மாணவன் ஒருவன் இந்த செயலை செய்துள்ளதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு இது போல் செயல்கள் வருங்காலங்களில் செய்யாமல் இருக்க மாணவர்களுக்கு மனநல சம்பந்தப்பட்ட வகுப்புகள் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு: காலவகாசம் கேட்கும் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News