ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2021, 06:07 PM IST
ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் title=

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். பகவான் ஐயப்பனை தரிசனம் செய்ய ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, அதாவது 48 நாட்கள் விரதம் இருந்து, பக்தர்கள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்வார்கள். இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் சபரி மலைக்கு செல்லும் நிலையில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள். 

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக, நாளை முதல்  ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

ALSO READ | சபரிமலை தரிசனத்துக்கு இவர்களுக்கு முன்பதிவு தேவை இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

முன்னதாக, சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “கேரளாவில் பலத்த மழை பெய்து வந்ததால், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கட்டமாக தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

தேவஸ்தானம் ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவை இல்லை என தற்போது தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. 

ALSO READ: அடுத்த 15 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கிடையாது: தேவஸ்தானம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News