Pakistan Crisis: பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. முஸ்லிம் நாடு உலக நாடுகளிடம் இருந்து நிதி உதவியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. கடன்கள் மூலம் நாட்டின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அரசு, இப்போது காஷ்மீரை மறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து கெடுபிடி செய்தால், எதிர்காலத்தில் கடன் பெறுவதில் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகளான சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் காஷ்மீரை மறந்து இந்தியாவுடன் நட்புறவு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.
இது மட்டுமின்றி, காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக பாகிஸ்தான் சர்ச்சையை ஏற்படுத்துவதை நிறுத்துமாறு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அறிவுறுத்தியுள்ளன. பாகிஸ்தானின் அனைத்து ஆட்சேபனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் காஷ்மீரில் அதிக அளவில் முதலீடு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் பத்திரிகையாளர் கம்ரான் யூசுப்பின் அறிக்கையில், OIC அமைப்பில் காஷ்மீர் தொடர்பாக எப்போதும் பிரச்சனையை கிளப்பும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா அடி கொடுத்துள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியா ஓஐசியின் வலிமையான நாடு என்பதையும், அதன் தலைமையும் அதன் கைகளில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓஐசியின் அனைத்து நடவடிக்கைகளும் சவுதி அரேபியாவின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் படிக்க | சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் திருத்தம்! பாகிஸ்தானிற்கு கெடு விதித்த இந்தியா!
சவுதி அரேபியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. ஏனென்றால், உலகின் ஒவ்வொரு தளத்திலிருந்தும் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை எழுபி வருகிறது. இப்போது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான செய்தியை வழங்கியுள்ளன. அது, தன்னுடைய பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள்வது முக்கியமா அல்லது காஷ்மீர் விவகாரத்தில் குழப்பத்தை உருவாக்குவது முக்கியமா என்ற நிலைக்கு தள்ளபட்டுள்ளது.
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மறுபுறம், இதற்கு முரணாக, இவ்வளவு பொருளாதார சீரழிவுகள் இருந்தபோதிலும், நாட்டில் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கார்களின் இறக்குமதியும் வேகமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலை உயர்வுக்கு மத்தியில், இங்குள்ள பணக்காரர்கள் நவாப்கள் ஆடம்பரத்தில் திளைப்பதையே இது காட்டுகிறது.
மேலும் படிக்க | உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ