தமிழ்நாடு அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக வெளியான தகவல்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவ்வாறான அட்டவணை ஏதும் தயாராகவில்லை என்றும் செய்தி வெளியிட்ட தனியார் செய்தி சேனலை தாக்கியிருக்கிறார்.
கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் அந்த மாநிலங்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டியது விதி என்று சிவசங்கர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அட்டவணை குறித்து தெரிந்துகொண்ட சிலர், தமிழ்நாடு முழுவதும் கட்டண உயர்வு வர இருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஏழை எளிய மக்களை பாதிக்காத வண்ணம் போக்குவரத்துக் கழகம் இயங்கிவரும் சூழலில் தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
மேலும் படிக்க | காமராஜர், கலைஞரை போல் எனது ஆட்சியில் பொற்காலம் - முதலமைச்சர் பெருமிதம்!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடியில் தவித்ததாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனாலும் எளிய மக்களுக்கு உதவும் வகையில் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
மேலும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு எழுதியிருக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்று வரை 112 கோடி பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை 2 அடுக்கு உயர்மட்ட சாலை - ஒப்பந்தம் கையெழுத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR