வேலூர்: வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே நாடகமானது. இந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் மக்கள் மாற்றி எங்கள் கூட்டணி வெற்றி பெற செய்வார்கள்.
தேமுதிக மக்கள் நலகூட்டணிக்கு வாக்களித்தால் ஊழல், லஞ்சத்தை மற்றும் வேலையில்லாமல் திண்டாட்டம் ஒழித்து தமிழ் மாநிலத்தை முன்னேற செய்வோம்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம் என விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துள்ளார். ஆனால் திமுக கட்சி ஆகட்டும் அல்லது அதிமுக கட்சி ஆகட்டும் அவர்களால் இப்படி ஒரு உறுதிமொழி எடுக்க முடியுமா? நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன் இப்படி ஒரு உறுதிமொழி எடுத்து காட்டுங்கள் என்றார்.