இந்த அரசு பணியாளர்கள் இன்று முதல் மே 20 வரை பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் இன்று (மே 6) முதல் வரும் 20-ம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 6, 2021, 06:26 AM IST
  • தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏற்றத்தைக் கண்டு வருகிறது.
  • தமிழகத்தில் இன்று முதல் புதிய கோவிட் கட்டுப்பாடுகள்.
  • மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை பணிக்கு வரவேண்டாம்-தமிழக அரசு.
இந்த அரசு பணியாளர்கள் இன்று முதல் மே 20 வரை பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு title=

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வீரியம் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று முதல் மே 20 ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.

முன்னதாக, கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு (Night Curfew) தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிறு முமு ஊரடங்கும் அமலில் உள்ளது. அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுவோரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

இதற்கிடையில், இன்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் (Restrictions) அமலுக்கு வருகின்றன. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த கட்டுப்பாடுகள் மே 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 

இந்த புதிய கட்டுப்பாடுகளின் கீழ் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் அதிகமாக உள்லதால், மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் இன்று (மே 6) முதல் வரும் 20-ம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு (TN Government) நேற்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து வசதிகளில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மாற்றுத்திறனாளிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் இந்த முடிவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரண நாட்களிலேயே பலவித சவால்களை எதிர்கொண்டு இயல்பு வாழ்க்கையை நடத்தி வரும் இவர்கள், கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டுள்ள பல வித கட்டுப்பாடுகளைத் தாண்டி பணிகளுக்குச் செல்வது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையில், அரசாங்கத்திம் இந்த முடிவை மாற்றுத்திறனாளிகள் வெகுவாக பாராட்டி வருக்கிறார்கள். 

ALSO READ: தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News