நாளை மறுநாள் ஞாயிறுக்கிழமை (மே 6-ம் தேதி) நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு நடைபெற 2 நாள்களே உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கு உதவும் வகையில் ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர். ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.
கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்!
திரு. முருகானந்தம் - 9790783187
திருமதி. சௌந்தரவல்லி - 8696922117
திரு.பாரதி - 7357023549
நடிகர் பிரசன்னா, தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு என்னால் உதவ முடியும். உதவி வேண்டுவோர் உங்களின் ஹால் டிக்கெட் போன்ற விவரங்கள் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் விவரங்களை எனக்கு அனுப்பவும். நான் உங்களின் பயண டிக்கெட்டை பதிவு செய்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.
— Prasanna (@Prasanna_actor) May 4, 2018
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கபட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்கும் வசதியும், தேர்வு மையத்துக்கு வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.