’முட்டுக்கட்டை போடாதீர்கள்’ பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

ஜீ தமிழ் நியூஸ் நடத்திய 'நாளைய இலக்கு 2023 'நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்ய விடுங்கள். பெற்றோர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் என தெரிவித்தார்.  

Written by - முனைவர் பலராமன் சுப்புராஜ் | Last Updated : Feb 9, 2023, 03:36 PM IST
’முட்டுக்கட்டை போடாதீர்கள்’ பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் title=

ஜீ குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஜீ தமிழ் நியூஸ் டிஜிட்டல் சேனலாக 24 மணிநேரமும் செய்தியை உடனுக்குடன் வழங்கி வருகிறது. சார்பில்லாமல் சமரசமில்லாமல் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பல்வேறு பார்வையாளர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதைச் சிறப்பினும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜீ தமிழ் நியூஸ் பள்ளி மாணவ, மாணவிகளுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது என்பது கவனத்திற்குரியது. குறிப்பாக, 'என் பள்ளி' என்னும் நிகழ்ச்சியானது மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக இது உள்ளது. பல்வேறு பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் தங்களின் பள்ளி அனுபவங்களை நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறி நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் நல்ஒத்துழைப்பை வழங்குகின்றனர். 

அதனடிப்படையில், 'நாளைய இலக்கு 2023' நிகழ்ச்சியையும் ஜீ தமிழ் நியூஸ் முன்னெடுத்து நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியானது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மன வலிமையோடு எழுதவும், உடல் நலத்தில் கவனம் செலுத்தும்படி நடத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேர்வுக்குபின் தமது தேர்வு முடிவை முதிர்ச்சித் தன்மையோடு உள்வாங்க வழிவகுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டது. மாணவ, மாணவிகள் தேர்ச்சிக்குப் பின் என்ன படிக்கலாம்? என்பதான குழப்பத்தைத் தீர்க்கும் வகையிலும் உயர்கல்வியில் வேலைவாய்ப்புள்ள படிப்புகள் தொடர்பான தெளிவையும் பெற வைக்கும் விதமாகவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க |  சமூகத்தை காப்பாற்றவே பொது வாழ்க்கைக்கு வந்தேன்: தமிழிசை செளந்தரராஜன்

கடந்த 2022 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக 'நாளைய இலக்கு' என்னும் நிகழ்ச்சியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதேபோல், இந்த ஆண்டும் (2023) பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 'நாளைய இலக்கு 2023' நிகழ்ச்சியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்துச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்திரு அரவிந்தன் ஐபிஎஸ், டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி மேனேஜிங் டிரஸ்டி அருட்சகோதரி ஜி.ஞானசெல்வம், டி.எம்.ஐ உயர்கல்வி ஆலோசகர் அருட்சகோதரி சேவியர் செல்வி, டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அழகேசன், அமெட் பல்கலைக்கழக முதல்வர் கேப்டன் கே. கார்த்திக், பத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளும், கல்வித்துறை அதிகாரிகள், இணை இயக்குநர் முனைவர் ந.அருள்முருகன், முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஜீ நியூஸ் தென்மண்டல ஆசிரியர் செபி ஸ்டேன்லி மற்றும் ஜீ தமிழ் நியூஸ் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

'நாளைய இலக்கு 2023 'நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய ஜீ தமிழ் நியூஸ் தொகுப்பாளர் சுரேஷ்ராஜன், “மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை கடந்த ஆண்டு (2022) நாளைய இலக்கு நிகழ்ச்சிக்கு அழைத்த அடுத்த கணமே நான் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதேபோல் இந்தாண்டும் அவரை அழைப்பு விடுக்க எங்கள் குழுவுடன் நேரில் சென்றபோது எங்களைப் புன்னகையுடன் வரவேற்று, தான் கண்டிப்பாக கலந்துகொள்கிறேன்” என்று கூறினார். மேலும், “தமிழ்நாடு முழுவதும் இந்த நிகழ்வைக் கொண்டு செல்லுங்கள்” என்று கூறி ஜீ தமிழ் நியூஸ் குழுவினரைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உற்சாகப்படுத்தியதாகவும் கூறினார்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் ஆற்றிய சிறப்புரையில், ஜீ நிறுவனம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்று பேசினார். என்ன செய்ய வேண்டும் என்பதில், ஜீ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை நடத்த வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதில், இந்த நிகழ்வில் மாணவர்கள் மட்டும் அளிக்கக்கூடாது. பெற்றோர்களையும் சேர்த்து அழைக்க வேண்டும் என்றார். மேலும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் என்றும் பிள்ளைகள் பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்தவர்கள். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்ய விடுங்கள் பெற்றோர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் என்பதையும் கூறினார். ஆதலால், அடுத்த ஆண்டு ஜீ நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் பெற்றோர்களையும் எதிர்பார்க்கிறேன் என்று பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் அவர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் படிக்க | முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து உற்சாகப்படுத்திய முதலமைச்சர்

வடக்கில் அபிநந்தன் என்றால் தெற்கில் அரவிந்தன் என்னும் மாபெரும் அடையாளத்தை உருவாக்கிக் காவல்துறையில் இரட்டைக்குழல் துப்பாக்கியாய்ச் சிறப்பாகச் செயலாற்றும் இரட்டைச் சகோதர்களில் ஒருவரான சென்னை போதைப்பொருள் தடுப்புப் பணியக மண்டல இயக்குநராக உள்ள அரவிந்தன் ஐபிஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையில், மாணவர்கள் தேர்வு காலத்தில் புதிதாக ஒரு இயலைப் படிக்கக் கூடாது எனத் தெரிவித்தார். மூன்று மணி நேரம் தேர்வில் நேர மேலாண்மையைக் (Time Management) கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தேர்வு முடிந்தபின்பு வினாத்தாள்களைப் பற்றிக் கலந்துரையாடல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். மேலும், தேர்வு சமயத்தில் மாணவர்கள் உடல்நலத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார். கணித ஆசிரியர் விளையாட்டுப் பாடவேளையை எடுத்துக் கொண்டு கணிதம் நடத்தினால் உடனடியாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தெரிவிக்குமாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், டாக்டர்.சந்தோஷ் ஜேக்கப், சி.சுதாகரன் ஐ.ஆர்.பி.எஸ், சைமன் ஆனந்த் ராஜ், கே.நித்யா, டாக்டர்.என்.அழகேசன், ஜோதி பெரியசாமி, கேப்டன்.கே.கார்த்திக், ஆசிக், எல்.கே.சார்லஸ் வெற்றிவேந்தன், சந்தோஷ் குமார் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்க உரை ஆற்றினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் ஐயங்களை வினாக்களாகக் கேட்டுத் தெளிவான பதிலைப் பெற்றனர். 

ஜீ தமிழ் நியூஸ் மற்றும் டி.எம்.ஐ பொறியியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவியர்களுக்குப் பேருந்து வசதியும் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பித்தக்கது. ஜீ நியூஸ் தென்மண்டல ஆசிரியர் செபி ஸ்டேன்லி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியைச் சுரேஷ்ராஜன் மற்றும் கீதா இருவரும் தொகுத்து வழங்கினர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News