ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததை அவமானமாக கருதுகிறேன்; இது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டு!!
ஐ.என்.எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில், அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. தாம் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை அன்று மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில், தெற்கு டெல்லியின் ஜோர் பாஃக்கில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்திற்கு 4 முறை சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அமலாக்கத்துறையினரும் வீட்டைக் கண்காணித்தனர். ப.சிதம்பரம் அங்கு இல்லாததை அடுத்து 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. இதைத் தொடர்ந்து, 25 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மாலையில் அவர் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
வீடு பூட்டப்பட்டு இருந்ததால் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற அதிகாரிகள் சிதம்பரத்தைக் கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு சென்றனர். சிபிஐயின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘இன்று டெல்லியில் திமுக முன்னின்று பல்வேறு கட்சிகளின் ஒத்துழைப்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் காஷ்மீரில் வீட்டு காவலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் மந்திரிகள் வெளியிடப்பட வேண்டும் என்பதே ஆகும். மேலும் காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டு வர வேண்டும்.
DMK President MK Stalin in Chennai on P Chidambaram arrested by CBI: I too saw how CBI jumped the wall & arrested him, it's a matter of shame for India, it is political vendetta. Chidambaram had asked for anticipatory bail but he was arrested, it's condemnable. pic.twitter.com/iaRZ1RGU1d
— ANI (@ANI) August 22, 2019
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தின் கைது கண்டிக்கத்தக்கது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்தது, நாட்டிற்கே அவமானம். இந்த கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பது தெரிகிறது’ என கூறியுள்ளார்.