மேகேதாட்டில் அணை கட்ட சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதா? வைகோ கேள்வி

Mekedatu Dam Issue In Parliament: காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு மத்தியசுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு அவர்கள் விளக்கமான பதில் அளித்தார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2022, 11:54 AM IST
  • காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை
  • மேகேதாட்டில் அணை கட்ட சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா?
  • வைகோ கேள்விக்கு அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடூ பதில்
மேகேதாட்டில் அணை கட்ட சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதா? வைகோ கேள்வி title=

நியூடெல்லி: காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு மத்தியசுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு அவர்கள் விளக்கமான பதில் அளித்தார். இது தொடர்பாக 12.12.2022 அன்று, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அமைச்சர் பதிலளித்தார்.

கர்நாடகாவின் நிலம் மற்றும் நீர் உரிமையை பாதுகாக்கும் வகையில், மேகேதாட்டு அணைத் திட்டம் நிறைவேற்றப்படுவது உறுதி என்றும், அந்தத் திட்டத்திற்கு மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருவதும், அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதன் பின்னணியில் இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

கேள்வி எண். 585

(அ) கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவதற்கு ஒன்றிய நீர் ஆணையம் அல்லது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதா?

(ஆ) இல்லையெனில், கர்நாடகா தனது நிதிநிலை அறிக்கையில், குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளதால், திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கர்நாடகா அரசை ஒன்றிய அரசு கேட்டுக்கொள்கிறதா?, என்ற மதிமுக எம்.பியின் கேள்விக்கு ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் டுடூ அளித்த பதில் இது...

மேலும் படிக்க | மீண்டும் கோவிட் நோய் பரப்பும் மரபணு மாறிய கொரோனா! பிறழ்ந்த வைரஸின் ரெளத்ரம் 

(அ) மற்றும் (ஆ):  கர்நாடகாவின் மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான கொள்கை அளவில் அனுமதி பெறுவதற்கு கர்நாடக அரசு, மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கி உள்ளது.

சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தாவா தீர்ப்பாயத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தல், மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக்கொள்வது போன்ற நிபந்தனைகள் ஆகும். ஒன்றிய நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு, கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க மேற்கூரிய நிபந்தனை பொருந்தும்.

அதன்பிறகு, மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, மற்றும் விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு அனுப்பப்பட்டது. காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின் போது, மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலாக சேர்க்கப்பட்டது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை.

மேலும் படிக்க | Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News