சென்னை: பொதுமக்களுக்கான சேவகர்களாய் மாவட்ட ஆட்சியர்கள் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள "நாமக்கல் கவிஞர் மாளிகையில்" IAS, IPS அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு நடைப்பெற்று வருகிறது. நேற்று துவங்கிய இம்மாநாடு நாளை வரை நடைப்பெறுகிறது.
இம்மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அவர்கள் "அதிகாரிகள் எப்போது பொதுமக்களுக்கான சேவகர்களாய் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு எப்போது பிரச்சணைகள் ஏற்பட்டாளும் உடனடியாக அதை சரிசெய்யும் அளவிற்கு அதிகாரிகள் தயாராக இருத்தல் வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன் குறித்து எந்நேரமும் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் எனவும், அவர்களுடைய நலனுக்காக பாடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 நாள் மாநாடான இம்மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!