ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் வரும் பிப்ரவரி 3, 4, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (10.02.2024) ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி, வேலூரில் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சுருள்வால் வீச்சில் தென் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வயது சிறுவனை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.
ராணிப்பேட்டையில் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இருளர் இன குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தனது சொந்த நிதியிலிருந்து மின் இணைப்பு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு விடுதிகளில் விடுதி காப்பாளர்கள் போலியான வருகை பதிவேட்டை தயார் செய்து பண மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் தீடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.