பேரணாம்பட்டு வீடு இடிந்து 9 பேர் பலி! 6 பேரை மீட்கும் பணி தீவிரம்!

வீடு இடிந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமும், காயமடைத்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2021, 01:53 PM IST
பேரணாம்பட்டு வீடு இடிந்து 9 பேர் பலி! 6 பேரை மீட்கும் பணி தீவிரம்! title=

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேர்ணாம்பட் பகுதியில் அஜித்தா தெருவில் உள்ள இரண்டு குடும்பத்தினர் நேற்றிரவு பெய்த கனமழையின்  காரணத்தினால் அருகிலிருந்த ஒரு வீட்டுக்குச் சென்று மாடிவீட்டில் அவர்கள் தங்கியுள்ளனர்.

ALSO READ மழையைத் தொடர்ந்து ஷாக் கொடுக்கும் காய்கறி விலை: தவிக்கும் சென்னைவாசிகள்

தொடர் மழையால் இன்று காலை கட்டிடம் இடிந்து விழுந்தது.  இந்த கட்டிடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். மீதமுள்ள 6 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுடனர். மீட்கப்பட்டவர்கள் பேரணாம்பட்டு, குடியாத்தம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல பாண்டியன் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வீடு இடிந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமும், காயமடைத்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News