மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் -வானிலை மையம் எச்சரிக்கை!

கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!

Last Updated : Jul 14, 2018, 02:16 PM IST
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் -வானிலை மையம் எச்சரிக்கை! title=

கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்..! 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னையில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Trending News