சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது காவல்துறை கண்காணிப்பில் காவேரி மருத்துவமனையில் உள்ளார். இவரது சகோததரர் அசோக் குமாருக்கு ஏற்கனவே வருமான வரித்துறையினர் 2 சம்மன்கள் அனுப்பிய நிலையில், தற்போது 3 ஆவது முறையாக சம்மனை அனுப்பியுள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை..
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்,செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் தொழில் தொடர்புடைய நபர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய மற்றும் சொந்தமான இடங்களில் வருமாவ வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்காெண்டனர். அதன் தொடர்ச்சியாக இம்மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மேலும் படிக்க | கரூரில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் - கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கை
ஆவனங்கள் சிக்கின..
வருமான வரித்துறையினரின் சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக செய்த மோசடி வழக்கில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆதாரங்களும் சோதனையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 15ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.
வருமான வரித்துறையினர் சம்மன்…
இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அசோக்குமார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வருவதாக அமலாகத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றிய ஆவணத்தின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரிடம் விசாரணை நடத்த ஏற்கனவே இரண்டு முறை சமன் அனுப்பி உள்ளது. இரண்டும் முறை அனுப்பப்பட்ட சம்மனிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக சம்மன்..
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு அதிகாரிகள் தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர் அதில் நாளை வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கைப்பற்றப்பட்ட ஆவணத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | ‘Don’t Touch’ ஆசையாக பேச வந்த ரசிகையின் செயலால் கோபமான ராதிகா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ