மது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு என மதுபாட்டில்களில் எழுதியிருந்தாலும், அதனுடைய விற்பனை மட்டும் குறைந்தபாடில்லை. நாள்தோறும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மது குடிப்பது என்பது தொன்று தொட்டு இருந்து வந்தாலும், அளவோடு இருந்துவிட்டால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. மது குடித்துவிட்டு வரும் போதையில் செய்யும் அடாவடித்தனங்களும், சமூக குற்றங்களுமே அதனை வெறுக்க பெண்களும் மக்களும் வெறுக்க முழுமுதற் காரணமாகும். அளவுக்கு அதிகமாக குடிக்கும்போது உடல் நலனுக்கும் அவை கேடு தான்.
பின்நாளில் மருத்துவமனையின் படிகளில் ஏறுவது மட்டுமின்றி உடல் உபாதைகளால் ஏற்படும் தொந்தரவுகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். இது குடும்ப உறுப்பினர்களையும், அவர்களின் பொருளாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கும். இது குறித்து அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அனுபவத்தின் வழியாக தெரிந்து கொள்பவர்களே அதிகம் இருக்கின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் குடித்துவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
(@jaffermohaideen) June 19, 2023
குமாரபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை போட்டுள்ளார். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டால் போதை தலைக்கேறி ஆட்டம் போட தொடங்கியுள்ளார். அதுவும், போதையில் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடியுள்ளார். அத்துடன் மட்டும் நிற்காமல் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களிடமும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் இவரின் முகம் சுழிக்க வைக்கும் நடவடிக்கையால் தொந்தரவுக்குள்ளாயினர். இது குறித்து குமாரபாளையம் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும், அப்பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் கன மழை! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ